×

ஹரியானா எல்லையில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிக்கு ரூ.1 கோடி நிவாரணம்: பஞ்சாப் அரசு அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி டெல்லி நோக்கி செல்லும் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் மீண்டும் டெல்லி நோக்கி புறப்பட விவசாயிகள் முயன்ற போது, பஞ்சாப், அரியானா எல்லையான கானவுரியில் போலீசாருக்கும் விவசாயிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், ரப்பர் குண்டால் சுட்டும் நடத்திய தாக்குதலில் 21 வயது விவசாயி தலையில் குண்டடி பட்டு பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயி சுப்கரண் சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். விவசாயி சுப்கரண் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

The post ஹரியானா எல்லையில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிக்கு ரூ.1 கோடி நிவாரணம்: பஞ்சாப் அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Haryana border ,Punjab government ,Delhi ,Punjab ,Ariana ,Dinakaran ,
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...