×

நகராட்சி எல்லை அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்: தூய்மை பணியாளர்கள் சிரமம்

 

ராஜபாளையம், பிப்.23: ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளில் சுகாதார பணியாளர்களை கொண்டு தினசரி அதிகாலை பேட்டரி வாகனங்கள் மூலம் மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து பெறப்பட்டு வருகிறது. மேலும் நகர் பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டும் உணவகங்கள், காய்கறி, மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஏற்படும் கழிவுகளை இரவு நேரங்களில் பெரிய வாகனங்கள் மூலம் பெற்று மக்கும் குப்பைகளை அரைத்து இயற்கை உரம் தயாரித்து வருகின்றனர்.

நகராட்சி எல்லைக்கு அருகே ஊராட்சி ஒன்றியம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவு இறைச்சிக் கழிவுகள் மற்றும் திருமண மண்டபங்களில் ஏற்படும் கழிவுகள், குடியிருப்பு பகுதியில் உள்ள கட்டிடக்கழிவுகளை சாலை ஓரமாக கொட்டி சென்று விடுகின்றனர். இது குறித்து பலமுறை அந்தந்த நிர்வாகம் மற்றும் துறை சார்ந்தவர்கள் அதிகாரிகளிடம் நகராட்சி நிர்வாகம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

இதனால் அவ்வப்போது நகராட்சி எல்லைக்கு அருகே உள்ள பணிகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர். ஆதலால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணிகள் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நகர் எல்லைக்கு அருகே கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நகராட்சி எல்லை அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்: தூய்மை பணியாளர்கள் சிரமம் appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Rajapalayam Municipality ,Dinakaran ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...