×

செல்லாண்டிபாளையம் பகுதியில் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

 

கரூர், பிப். 23: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் இருந்து சுக்காலியூர் செல்லும் சாலையில் செல்லாண்டிபாளையம் பகுதி உள்ளது. இந்த பகுதியின் இருபுறமும் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியின் இடதுபுறம் குடியிருப்புகளை ஒட்டி சாக்கடை வடிகால் அமைக்கும் பணி துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த பணியின் காரணமாக குடியிருப்பு வாசிகள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த பணியை விரைந்து முடித்து, குடியிருப்பு வாசிகள் எளிதாக இதனை பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செல்லாண்டிபாளையம் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

The post செல்லாண்டிபாளையம் பகுதியில் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Chellandipalayam ,Karur ,Karur Municipal Corporation ,Tirumadianyur ,Karur Corporation ,Sukkaliyur ,Dinakaran ,
× RELATED பசுபதிபாளையம் பாலம் அருகே அமராவதி...