×

தெரு நாய்களுக்கு ஏற்படும் தோல் நோய் குறித்து ஆய்வு செய்யப்படும்: ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை, பிப்.23: சென்னை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடந்தது. உறுப்பினர்கள் பேசியதாவது:
மண்டலக்குழு தலைவர் ரவிச்சந்திரன்: பள்ளி மாணவிகளுக்கு பாவாடை தாவணிக்கு பதில் பின்னொபார்ம் வழங்க வேண்டும்.
கொசு மருந்து அடித்தால் கொசுக்கள் சிறிது நேரத்தில் மீண்டும் எழுந்து பறக்கின்றன. கொசு மருந்தை ஆய்வு செய்ய வேண்டும். நீலாங்கரை, கொட்டிவாக்கம் பகுதிகளில் பக்கிங்காம் கால்வாய் அருகே இருக்கும் பாலங்களை சீரமைக்க வேண்டும்.
நிலைக்குழு தலைவர் (கணக்கு) தனசேசர்: மாநகராட்சி ஆவணங்கள், பொருள் தீர்மானம் தமிழ் மற்றும் ஆங்கிலம் அல்லது தமிழில் வழங்க வேண்டும்.
மண்டலக்குழு தலைவர் ராமுலு: தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகளை வளர்க்க தனி கொட்டகை அமைக்க வேண்டும்.
வார்டு 6 எம்.எஸ்.திரவியம் (காங்கிரஸ்): சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிலைக்குழு தலைவர் (கல்வி) விஸ்வநாதன்: கருத்தடை செய்த நாய்களுக்கு தோல் நோய் ஏற்படுகிறது. கருத்தடை செய்ய செலுத்தப்படும் மருந்தில் ஏதாவது பிரச்னை உள்ளதா, அந்த சிகிச்சையில் என்ன பிரச்னை என்பது குறித்து ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆணையர் ராதாகிருஷ்ணன்: நாய்களுக்கு கருத்தடை செய்ய ஊசி போடும் முறை தற்போது இல்லை. அதற்கான அனுமதிக்காக கால்நடை மருத்துவத்துறையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கருத்தடையின் போது தடுப்பூசி, மயக்க ஊசி மட்டுமே போடப்படும். மற்ற நாய்களில் இருந்து நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம். இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்யப்படும்.

The post தெரு நாய்களுக்கு ஏற்படும் தோல் நோய் குறித்து ஆய்வு செய்யப்படும்: ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Commissioner ,Radhakrishnan ,Chennai ,Chennai Municipal Corporation ,Zonal Committee ,Ravichandran ,
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...