×

சித்தா, யுனானி மருத்துவத்தில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு, பிப்.23: செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பளிக்கப்பட்ட சித்தா மருத்துவ அலுவலர், யுனானி மருத்துவ அலுவலர், மருந்தாளுநர், மருந்து வழங்குபவர், பல்நோக்குப் பணியாளர்கள் என மொத்தம் 12 தற்காலிக காலிப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர், அதனை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் பணியிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு அடுத்த மாதம் 8ம் தேதிக்குள் மாவட்ட நலவாழ்வு சங்கம், நிர்வாக செயலாளர், துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள், செங்கல்பட்டு அலுவலகம், தேசிய யானைக்கால் நோய் தடுப்பு திட்ட அலுவலக வளாகம், எண்.3, ஜி.எஸ்.டி சாலை என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், பணிகுறித்த விவரம், காலிப்பணியிட விவரம் மற்றும் ஊதியம் ஆகிய விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையிலானது. இப்பணியிடம் எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டாது. இவ்வாறு கூறியுள்ளார்.

The post சித்தா, யுனானி மருத்துவத்தில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Siddha ,Unani Medicine ,Chengalpattu ,Collector ,Arunraj ,District Welfare Association ,Dinakaran ,
× RELATED சென்னை அருகே சித்த மருத்துவமனையில்...