×

கூலி தொழிலாளி தற்கொலை

கிருஷ்ணகிரி, பிப்.23: தேன்கனிக்கோட்டை தாலுகா, தாசக்கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா (25), கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பசப்பா நேற்று முன்தினம் உத்தனப்பள்ளி அருகேயுள்ள சானமாவு அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்து வந்த உத்தனப்பள்ளி போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கூலி தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Basappa ,Dasappakai village ,Dhenkanikottai taluk ,Sanamau government ,Uthanapally ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்