×

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கார் மரத்தில் மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவியில் கார் மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். கிட்டூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய நிலையில் ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 2 குழந்தைகள், சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கிட்டூர் பகுதியில் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்று திரும்பியபோது கார் மரத்தில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு வீட்டிற்குச் சென்றபோது, ​​​​ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரில் இருந்த 9 பேரில் 6 பேர் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 2 குழந்தைகள், சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கர்நாடக மாநிலம் பெலகாவியில் கார் மரத்தில் மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Belagavi, Karnataka ,Bangalore ,Kittur ,
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...