×

விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை.. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக சம்மன்.. பிப்.26-ல் ஆஜரா? கைது செய்யப்படுவாரா?

புதுடெல்லி,: மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த சட்ட விரோத பணப்பரிமாற்றம் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு,அதில் நடந்ததாக கூறப்படும் சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்குகளில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களான முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, மாநிலங்களவை எம்பி.யான சஞ்சய்சிங் ஆகியோர் சிபிஐ, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும் படி, ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகிறது. ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், பழிவாங்கும்.உணர்வோடும் அனுப்பப்படும் இந்த சம்மன்கள் சட்ட விரோதமானவை என கூறி வரும் கெஜ்ரிவால், விசாரணைக்கு ஆஜராக மறுத்து வருகிறார்.

ஏற்கனவே, அமலாக்கத்துறை அவருக்கு 6 முறை சம்மன் அனுப்பி இருந்தது. 6 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இதுபோன்ற நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 7வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் வரும் பிப்.26ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 26-ந் தேதி கெஜ்ரிவால் ஆஜராவாரா? அப்படி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரானால் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் போல கைது செய்யப்படுவாரா? என்கிற பரபரப்பு நிலவுகிறது.

The post விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை.. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக சம்மன்.. பிப்.26-ல் ஆஜரா? கைது செய்யப்படுவாரா? appeared first on Dinakaran.

Tags : Samman ,Arvind Kejriwal ,New Delhi ,Enforcement Department ,Delhi ,Chief Minister ,Dinakaran ,
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...