×

கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.315ல் இருந்து ரூ.340 ஆக உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

டெல்லி: கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 340 ரூபாயாக ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி எல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று இரவு ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர்; கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.

அதன்படி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.315ல் இருந்து ரூ.340 ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபரில் தொடங்கும் 2024-25ம் ஆண்டு பருவத்தில் சர்க்கரை ஆலைகள் குவிண்டால் ஒன்றுக்கு 340 விதம் கரும்பை கொள்முதல் செய்யும் என்று அமைச்சர் கூறினார். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக அனுராக் தாகூர்தெரிவித்தார்.

இதேபோல் விண்வெளி துறையில் அந்நிய நேரடி முதலீட்டிருக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக அவர் கூறினார். இதன் மூலமாக செயற்கைக்கோள்கள் உற்பத்தி மற்றும் செயல்பாடு, செயற்கைக்கோள் தரவு தயாரிப்புகளை 74% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.315ல் இருந்து ரூ.340 ஆக உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : PM ,MODI ,Delhi ,Union Cabinet ,Delhi border ,Dinakaran ,
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!