×

சின்னதாராபுரம் முனிமுக்தீஸ்வரர் கோயிலில் மாசி மக தேரோட்ட விழா ஏற்பாடுகள் தீவிரம்

க.பரமத்தி,பிப்.22: க.பரமத்தி ஒன்றியம் சின்னதாராபுரத்தில் அகிலாண்டேஸ்வரி உடனமர் முனிமுக்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மக திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இதற்காக கடந்த 15ம்தேதி வியாழன் அன்று விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி முகூர்த்தகால் நடப்பட்டடு திருவிழா தொடங்கியது. வரும்(18ம்தேதி) தேரோட்டத்திற்காக கொடியேற்றம் செய்யப்பட்டது. விழா நாட்களில் தினமும் பல்லக்கு, சிம்ம வாகனம், காமதேனு வாகனம், கைலாச வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது.

தொடர்ந்து இன்று (22ம்தேதி) திருக்கல்யாணம் நடத்தப்பட்டு பங்கேற்கும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை யானை வாகனத்தில் வீதி உலா வழிபாடு மறுநாள் 24ம்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா தொடங்குகிறது. கடைவீதியில் இருந்து தேர் மேளதாளத்துடன் புறப்பட்டு மாரியம்மன், பகவதியம்மன் கோயிலை வந்தடையும். அங்கு இரவு முழுவதும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். 25ம்தேதி காலை மாரியம்மன், பகவதியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு அகிலாண்டேஸ்வரி, முனிமுக்தீஸ்வரர் கோயிலை வந்தடையும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை முனிமுக்தீஸ்வரர் திருப்பணி மன்றம் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

The post சின்னதாராபுரம் முனிமுக்தீஸ்வரர் கோயிலில் மாசி மக தேரோட்ட விழா ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Masi Maha Therota Festival ,Chinnadharapuram Munimuktheeswarar Temple ,K. Paramathi ,Akilandeswari Udanamar Munimuktheeswarar Temple ,Chinnadharapuram, ,Masi Maha festival ,Ganesha ,Mukurthakal ,Chinnadharapuram ,Munimuktheeswarar Temple ,
× RELATED க.பரமத்தி மயான சாலையில் விபத்து ஏற்படுத்தும் பள்ளங்கள்