×

கரூர், மேலப்பாளையம் பகுதியில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கரூர், பிப். 22: கரூர் முத்துலாடம்பட்டி மற்றும் மேலப்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி என இரண்டு ஆறுகள் ஓடுகிறது. வாங்கல், தவிட்டுப்பாளையம், தோட்டக்குறிச்சி, திருமுக்கூடலூர், மாயனூர், குளித்தலை போன்ற பகுதிகளில் காவிரி ஆற்றுப்பாசனத்திலும், செட்டிப்பாளையம், ராஜபுரம், மேலப்பாளையம் போன்ற பகுதிகளில் அமராவதி ஆற்றுப்பாசனம் வாயிலாகவும் விவசாயம் நடைபெற்று வருகிறது.

மேலும், காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் இருந்து வாய்க்கால்கள் மூலமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அதுபோல, கரூர் மாவட்டம், மேலப்பாளையம், கோயம்பள்ளி, சணப்பிரட்டி மற்றும் முத்துலாடம்பட்டி உட்பட இதனை சுற்றிலும் உள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள், பருத்தி, மரவள்ளிக் கிழங்கு, சூரியகாந்தி போன்ற பயிர்களை தங்கள் பகுதி நிலங்களில் அதிகளவு ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போதைய நிலையில், சூரியகாந்தி பயிருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து மேலப்பாளையம் பகுதியை சுற்றிலும் இந்த பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கரூர், மேலப்பாளையம் பகுதியில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Karur, Melapalayam ,Karur ,Karur Muthuladampatti ,Melapalayam ,Cauvery ,Amaravati ,Wangal ,Davithipalayam ,Thotakurichi ,Tirumukudalur ,Mayanur ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்