×

42 வேகன்களில் சென்றன தமிழ் பல்கலைக் கழகத்தில் உலகத் தாய்மொழி நாள் விழா

தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளியின் சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை வகித்து பேசியதாவது, தமிழிலேயே கையெழுத்திடுதல், பெயரின் முதல் எழுத்தைத் தமிழிலேயே எழுதுதல், அலைபேசியின் குறுஞ்செய்திகளைத் தமிழ்மொழியிலேயே பகிர்ந்து கொள்ளுதல் என, இளம் சமூகத்தினராகிய மாணவர்கள் தாய்மொழி உணர்வோடு திகழவேண்டும் என்றார். எழுத்தாளர் சூர்யா சேவியர் பேசும்போது, மொழி என்பது தொடர்புக் கருவி மட்டுமன்று, அது அகம் சார்ந்த வாழ்வியலை, புறம் சார்ந்த சமூகம், பொருளாதாரம், அரசியல், கலை, பண்பாடு என அனைத்தையும் மரபார்ந்த நிலையில் எடுத்துச் செல்லும் காரணி. தமிழ் இயற்கையின் மொழி. தமிழ்நாட்டில் காணலாகும். பெரும்பான்மையான ஊர்ப்பெயர்கள் புளியவனம் திண்டிவனம், – தில்லைவனம்- சிதம்பரம், கடம்பவனம் – மதுரை, மூங்கில்வனம் – திருநெல்வேலி என மரங்களின் பெயர்களால் பெயரிடப் பெற்றவை. இன்று மறுவி வழங்குகின்றன என்றார்.

The post 42 வேகன்களில் சென்றன தமிழ் பல்கலைக் கழகத்தில் உலகத் தாய்மொழி நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Tamil University ,World Mother Language Day ,Thanjavur ,Tamil University School of Indian Languages and Comparative Literature ,Vice-Chancellor ,Thiruvalluvan ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...