×

2 கன்று ஈன்ற நாட்டு மாடு

கிருஷ்ணகிரி, பிப்.22: கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அடுத்த குரும்பர் தெருவைச் சேர்ந்தவர் சீதாராமன், விவசாயி. இவர் உழவுக்கு ஒரு ஜோடி நாட்டு மாட்டையும், பாலுக்காக 6 பசு மாடுகளையும் வளர்த்து வருகிறார். நேற்று காலை நாட்டு மாடு ஒரு ஆண், ஒரு பெண் என 2 கன்றுகளை ஈன்றது. ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற மாட்டை, அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.

The post 2 கன்று ஈன்ற நாட்டு மாடு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Seetharaman ,Kurumbar Street ,Gandhikuppam, Krishnagiri District ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்