×

விஸ்வ பாரத் மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே விஸ்வ பாரத் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தேசிய பொதுச்செயலாளர் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தலைமை வகித்தார். விஸ்வகர்மா ஐந்தொழில் சமுதாய பெண்கள் பெயரில் வீட்டுமனை பட்டா, ஐந்தொழில் பட்டறைகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவைத்தலைவர் வேலுமணி வில்வராஜன், துணைப் பொது செயலாளர் கார்த்திக், மாநில மகளிர் அணி செயலாளர் ராதா ராஜன், மாநில இளைஞரணி செயலாளர் பிரகாஷ், மண்டல பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம், வரதராஜ், குழந்தைவேலு, கோவை தெற்கு மாவட்ட லட்சுமணன், மலுமிச்சம்பட்டி மோகன் குமார், கிழக்கு மாவட்டம் சோமசுந்தரம், வடக்கு மாவட்டம் சம்பத்குமார், கிட்டு சாமி, மாநகர் மாவட்டம் நாச்சிமுத்து விஸ்வநாதன் சுப்பையா, ஈரோடு மேற்கு மாவட்டம் மாரிமுத்து, சத்தியமங்கலம் ரங்கநாதன், புளியம்பட்டி பிரேமலதா, நாகராஜ், தேனி மாவட்டம் முத்துக்குமார், ரங்கசாமி, ராமதாஸ் குமார், மதுரை மாவட்டம் நாகராஜன், திருப்பரங்குன்றம், சண்முகநாதன், மாநில செயலாளர் திருப்பூர் கணேசன், கோவை விஸ்வகர்மா மகளிர் சங்கம், லதா, சரஸ்வதி, குளோபல் விஸ்வகர்மா தலைவர் தர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டார்.

The post விஸ்வ பாரத் மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Viswa Bharat People's Party ,KOWAI ,TAMIL NADU PONDICHERI ,VISWAKARMA FEDERATION OF SOCIAL ASSOCIATIONS ,TALUKA ,National Secretary General ,Srilasree Babuji ,Dinakaran ,
× RELATED வால்பாறை அருகே காட்டு மாடு முட்டி தேயிலை தோட்ட தொழிலாளி பலி..!!