×

தகவல் ஆணையத்திற்கு போலி ஆவணம் சமர்ப்பித்த இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மீது வழக்கு

இளையான்குடி: தகவல் ஆணையத்தில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்ததாக இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், சிவகங்கை மாவட்ட பேரூராட்சிகளில் உள்ள நீர்நிலைகள் குறித்த தகவல்களை அளிக்கும்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கடந்த ஆக.2022ல் விண்ணப்பித்திருந்தார். இதற்கு, சிவகங்கை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து முறையான தகவல்கள் அளிக்கப்படவில்லை. இதனால் அவர், தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து, அவர் கேட்ட தகவல்களை உடனடியாக கொடுக்குமாறு தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

The post தகவல் ஆணையத்திற்கு போலி ஆவணம் சமர்ப்பித்த இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Ilayayankudi Municipality ,Executive ,Information Commission ,Ilayayankudi ,Executive Officer ,Radhakrishnan ,Sivagangai district ,Sivagangai ,Dinakaran ,
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இனிமேல்...