×

சிவகங்கை மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்க கோரிக்கை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 635 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 171 பகுதி நேர நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் 23 முழுநேர நியாயவிலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,20,249 கார்டுதாரர்கள் உள்ளனர். கடந்த 2017 முதல் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஆதார் பதிவு செய்தவர்கள் பெயர் மட்டுமே ஸ்மார்ட் கார்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆதார் பதிவு செய்திருந்தாலும் ஸ்மார்ட் கார்டில் பெயர் இல்லாமல் ஏராளமானோர் பெயர்கள் நீக்கப்பட்டன. நீக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்களது பெயர்களை சேர்க்க ஆன் லைன் மூலம் விண்ணப்பம் அளித்தனர்.

The post சிவகங்கை மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sivagangai district ,Sivagangai ,Tamil Nadu Consumer Goods Trade Corporation ,Sivaganga district ,Dinakaran ,
× RELATED மாநில அளவிலான போட்டிக்கு கூடைப்பந்து வீரர்கள் இன்று தேர்வு