×

டெல்லி எல்லையில் மீண்டும் பதற்றம்: ஜே.சி.பி. இயந்திரங்களுடன் புறப்பட்ட விவசாயிகள் அரியானா எல்லையில் கைது

டெல்லி: ஜே.சி.பி. இயந்திரங்களுடன் புறப்பட்ட விவசாயிகள் அரியானா எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்குகின்றனர். விவசாயிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படவில்லை. விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படாததால் மீண்டும் போராட்டம் தீவிரமடைகிறது. வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் தொடர்பாக சட்டம் இயற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

12 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்பட பல மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி எல்லையில் காவல்துறையினர் அமைத்துள்ள தடுப்புகளை தகர்த்தெறிய ஜே.சி.பி. இயந்திரங்களுடன் விவசாயிகள் புறப்பட்டனர். ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறி வருகின்றனர். விவசாயிகள் எடுத்து வரும் ஜே.சி.பி. இயந்திரங்களை தடுத்து நிறுத்த பஞ்சாப் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை மீண்டும் தொடங்க உள்ள நிலையில் அரியானா எல்லையில் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தால் எல்லையில் போலீஸ், துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர்

The post டெல்லி எல்லையில் மீண்டும் பதற்றம்: ஜே.சி.பி. இயந்திரங்களுடன் புறப்பட்ட விவசாயிகள் அரியானா எல்லையில் கைது appeared first on Dinakaran.

Tags : Delhi border ,J. C. B. ,Ariana border ,Delhi ,EU ,Dinakaran ,
× RELATED டெல்லியில் விவசாயிகளின் பேரணி...