×

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

ஊத்தங்கரை, பிப்.21: ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில், மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊத்தங்கரை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமை தாங்கினார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி, ஆலோசனைகள் வழங்கினார். இத்ல் எஸ்ஐ சிற்றரசு, எஸ்எஸ்ஐக்கள் சிவகாமி, செண்பகவள்ளி, காவலர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தலைமை ஆசிரியர் ஞானபண்டிதன் நன்றி கூறினார்.

The post போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Oodhangarai ,Alcohol Prohibition Enforcement Unit ,Karapattu Government Higher Secondary School ,Inspector ,Manjula ,Uthangarai Prohibition Enforcement Division ,Dinakaran ,
× RELATED ஊத்தங்கரை அருகே 16ம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு