×

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தேன்கனிக்கோட்டை, பிப்.21: தேன்கனிக்கோட்டை தாலுகா ரத்தினகிரி கிராமத்தில், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்கக்கோரி, மகளிர் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் தீபா மாரப்பன் தலைமை வகித்தார். அசோக் குமார், மாதேஷ், செந்தமிழ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Dhenkanikottai taluk Rathinagiri ,Tamil Nadu Farmers' Protection Association ,Deepa ,Dinakaran ,
× RELATED உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ₹92 ஆயிரம் பறிமுதல்