×

விவசாய விழிப்புணர்வு இயக்க தலைவர் வலியுறுத்தல் வாரச்சந்தையால் போக்குவரத்து நெருக்கடி

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரியகுளத்துப்பாளையம் வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் இருந்து பெரியகுளத்துப்பாளையம் செல்லும் சாலையோரம் ஞாயிறுதோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. கரூர், வெங்கமேடு, குளத்துப்பாளையம், வாங்கப்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த வாரச்ந்தைக்கு வந்து தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். வாரச்சந்தை நடைபெறும் சாலையில், வெங்கமேடு பகுதியில் இருந்து இனாம்கருர், குளத்துப்பாளையம், பெரியகுளத்துப்பாளையம், சேலம் பைபாஸ் சாலை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலையின் வழியாக செல்கிறது.

The post விவசாய விழிப்புணர்வு இயக்க தலைவர் வலியுறுத்தல் வாரச்சந்தையால் போக்குவரத்து நெருக்கடி appeared first on Dinakaran.

Tags : Agriculture Awareness Movement ,Karur ,Periyakulatupalayam ,Karur Corporation ,Vengamedu ,Periyakulatuppalayam ,Kulathupalayam ,Vangapalayam ,Dinakaran ,
× RELATED கரூர் சுக்காலியூர் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்