×

தாளவாடியில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டம் கலெக்டர் தலைமையில் இன்று முகாம்

ஈரோடு: உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் இன்று (21ம் தேதி) தாளவாடியில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், இனி ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமை ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

 

The post தாளவாடியில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டம் கலெக்டர் தலைமையில் இன்று முகாம் appeared first on Dinakaran.

Tags : Thalawadi ,Erode ,Chief Minister of ,Tamil ,Nadu ,
× RELATED சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை..!!