×

வயிற்றைக் காக்கும் ஓமம்

நன்றி குங்குமம் தோழி

* உடல் பலம் பெற சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் பலவீனமாக இருப்பார்கள். ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

* அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தில் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து பாதியாக்கி குடிக்கலாம்.

* தொண்டையில் புகைச்சல் நீங்க ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை சாப்பிடலாம்.

* மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை சமபங்கு பொடித்து, கடுக்காய் பொடி சேர்த்து மோரில் கலந்து குடிக்கலாம்.

* பசியை தூண்ட ஓம கஷாயம் அருந்தலாம்.

* ஓமம் – 252 கிராம், ஆடாதோடைச் சாறு – 136 கிராம், இஞ்சி ரசம் – 136 கிராம், பழரசம் – 136 கிராம், புதினாசாறு – 136 கிராம், இந்துப்பு – 34 கிராம் சேர்த்து ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளை 650 மி.லி. சாப்பிட்டு வந்தால், இருமல் குணமாகும்.

* ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.

* ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

* நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஓம எண்ணெயை மூட்டு வலிக்கு தடவினால் நாளடைவில் மூட்டி வலி குணமாகும். எண்ணெயை பஞ்சில் தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும்.

* தொப்பையை குறைக்க தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்பூன் இரண்டையும் தண்ணீரில் கொதிக்க வைத்து வெந்தவுடன் மூடிவைத்துவிட வேண்டும். காலை எழுந்து கரைத்து குடிக்க 15 நாட்களில் தொப்பை காணாமல் போகும்.

* ஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் கருகாமல் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து ‘மிக்சியில்’ பொடிக்க வேண்டும். சாப்பிட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தேக்கரண்டி, குவியலாக, சாப்பிட வயிற்றுக் கடுப்புப் புறங்காட்டி ஓடும். ஓமம் என்னும் அருமருந்தை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளையும், உங்களையும் ஆரோக்கியமானவராக மாற்றி நீண்ட ஆயுளோடு இனிதே வாழுங்கள்.

– பொ.பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

The post வயிற்றைக் காக்கும் ஓமம் appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,
× RELATED சக்கர நாற்காலியில் எழுந்து நிற்கலாம்!