×

வற்றல் தயாரிப்பில் விவசாயிகள் தீவிரம்

ராயக்கோட்டை: ராயக்கோட்டை பகுதியில் சீசன் காரணமாக பச்சை மிளகாய் விளைச்சல் அதிகரித்துள்ளது. விலை கிலோ ₹15க்கு விற்பனையாவதால், வற்றல் மிளகாய் தயாரிப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில், சீசன் காரணமாக தற்ேபாது பச்சை மிளகாய் விளைச்சல் அதிகரித்துள்ளது. வரத்து அதிகரிப்பால், மார்க்கெட்டில் பச்சை மிளகாய் விலை கடுமையாக சரிந்துள்ளது. குண்டு மிளகாய், நீள மிளகாய் மற்றும் சீனி மிளகாய் ஆகியவை, விவசாயிகளிடம் மொத்த விலைக்கு கிலோ ₹15க்கு விற்பனையாகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து, அதிக அளவில் பச்சை மிளகாய் வருவதால் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

The post வற்றல் தயாரிப்பில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Rayakottai ,Varattu ,Dinakaran ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...