×

அய்யர்மலை கிரிவலப் பாதையில் சேதமடைந்த சாலையால் பக்தர்கள் அவதி

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலை கிரிவலப் பாதையில தெற்கு பகுதியில் இருந்து இரும்பூதிபட்டி சந்தைபேட்டை வழியாக வயலூர் வரை செல்லும் கிராமப்புற சாலை உள்ளது. அதேபோல் சடையம்பட்டி வரை செல்லும் கிராமப்புற சாலையும் உள்ளது. வழியாக சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான கிராம பொதுமக்கள் விவசாயிகள், இந்த சாலை வழியாகத்தான் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் பயணிக்கின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த கிராமப்புற சாலைகள் தற்பொழுது உருக்குளைந்து கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருப்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் கிராம பகுதிகளில் கர்ப்பிணி பெண்கள் அவசர பிரசவகாலத்திற்காக அய்யர் மலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வாகனங்கள் செல்லும் பொழுது சாலைகள் பழுதடைந்து இருப்பதால் ஒருசில நேரங்களில் மிகுந்து சிரமத்துக்குள்ளாகி வருகின்றன. இந்த அவல நிலையை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கள ஆய்வு செய்து பொதுமக்கள் நலன் கருதி புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post அய்யர்மலை கிரிவலப் பாதையில் சேதமடைந்த சாலையால் பக்தர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Ayyarmalai Kriwala ,Kulithalai ,Karur District ,Aiyarmalai Kriwala Pass ,Vayalur ,Irumboothipatti ,Sadiyampatti ,Ayyarmalai Krivalap ,
× RELATED குளித்தலை அருகே வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்