×

பழுதான மீட்டர்களை மாற்றக்கோரி ராமேஸ்வரத்தில் போராட்டம்

ராமேஸ்வரம், பிப்.20: ராமேஸ்வரம் பகுதியில் வீடுகளில் இருக்கும் பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. ராமேஸ்வரம் பகுதியில் வீடுகளில் மின்சார வாரியத்தினால் பொருத்தப்பட்டுள்ள மின் மீட்டர்கள் பல இடங்களில் பழுதாகி உள்ளது. பழுதான மின் மீட்டர்களால் தவறான அளவுகள் காட்டப்படுவதால் மின் கட்டணமும் அதிகளவில் செலுத்த வேண்டியுள்ளது.

மின் நுகர்வோர்கள் பலர் இதுகுறித்து புகார் அளித்ததுடன் புதிய மீட்டர்கள் பொருத்தவும் கேட்டு வருகின்றனர். ஆனால் மின்சார வாரிய அதிகாரிகள் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, நகர் செயலாளர் செந்தில்வேல் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஜீவானந்தம், மாதர் சங்க நிர்வாகி வடகொரியா உட்பட பலர் பேசினர். போராட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

The post பழுதான மீட்டர்களை மாற்றக்கோரி ராமேஸ்வரத்தில் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Electricity Board ,Communist Party of India ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி