தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது பாஜக: மோடி அரசின் சாதனைகளை விளக்கும் பிரச்சார வீடியோ வெளியீடு..!

டெல்லி: மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாஜக தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் பிரச்சார வீடியோவானது வெளியிடபட்டுள்ளது.

2024-ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் தேதி மார்ச் 10-ம் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்கப்படுகிறது. மற்ற கட்சிகளை போல பாஜகவும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. அதற்கு முதற்கட்டமாக நேற்று முன்தினம் குஜராத்தில் உள்ள காந்தி நகரில் பாஜகவுன் தேர்தல் அலுவலகம் திறக்கபட்டது. அதனை அடுத்து இன்று பாஜக மக்களவை தேர்தலுக்கான தனது பிரச்சார பாடலை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் மக்களவை தேர்தலின் போது பாஜக வெளியிடக்கூடிய பிரச்சார பாடலானது மக்களை கவர கூடியதாக இருக்கும். அந்த வகையில், இப்போது மோடி அரசு 400-க்கு மேல் என்று பாஜக பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் இன்று பாஜக தனது தேர்தல் பிரச்சார பாடலை வெளியிட்டுள்ளது.

இந்த படல் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் சாதனைகளை விளக்குவதாக அமைந்துள்ளது. பென்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம், இலலச வீடுகள் வழங்கும் திட்டம், வீடுகள் தோரும் குடிநீர் வழங்கும் திட்டம், Digital Revolution, அயோத்தி ராமர் கோயில் கட்டபட்டது, வந்தே பாரத், சந்திரயான் விண்கலம், ஒலிம்பிக் போட்டிகளில் வீரர்கள் அதிக அளவில் பதக்கங்களை பெற்றது, ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு என கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் சாதனைகளை விலக்குவதாக அந்த பிரச்சார மாநாடு அமைந்துள்ளது.

The post தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது பாஜக: மோடி அரசின் சாதனைகளை விளக்கும் பிரச்சார வீடியோ வெளியீடு..! appeared first on Dinakaran.

Related Stories: