×

காங்கிரஸ் கட்சியை கண்டித்து பா.ஜவினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: காங்கிரஸ் கட்சியை கண்டித்து பாஜவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்ட பா.ஜ சார்பில் காங்கிரஸ் கட்சியில் நடைபெற்ற ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மணவாளநகரில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய அரசு நலத்திட்டப்பிரிவு மாநில தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், லயன் சீனிவாசன், ஜெய்கணேஷ், மாவட்ட துணைத்தலைவர் முல்லை ஞானம், மாவட்ட செயலாளர்கள் பாலாஜி, பன்னீர்செல்வம், ரமேஷ், மொரார்ஜிதேசாய், பாஸ்கர், ஏனாம்பாக்கம் ரவி, கீதாஞ்சலி சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தலைவர் ராஜசிம்ம மகேந்திரா என்ற அஷ்வின் குமார் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் துரைசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ரகு, மாவட்ட இளைஞரணி தலைவர் டில்லி பாபு, மாவட்ட மகளிரணி அணி பொது செயலாளர் ரஞ்சனி, மண்டல தலைவர்கள் சுரேஷ், ரவிக்குமார், பழனி, சதீஷ்குமார், தொடுகாடு ஊராட்சி தலைவர் வெங்கடேசன் உள்பட மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வெங்கடேசன், அபிலாஷ் ஆகியோர் நன்றி கூறினர்.

 

The post காங்கிரஸ் கட்சியை கண்டித்து பா.ஜவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress party ,Tiruvallur ,Thiruvallur ,Dinakaran ,
× RELATED ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது