- K.Veeramani
- மைக்ஜத்திற்கு திராவிடர் கஜகம்
- சென்னை
- திராவிடர் கழகம்
- மிக்ஜாம்'
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத்துக்காக திராவிடர் கழகம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை தி.க. தலைவர் கி.வீரமணி வழங்கினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, இயற்கையின் சீற்றம் காரணமாக புயல் – மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் மக்கள் பெரும் அல்லலுக்கும் துயருக்கும் ஆளாகியுள்ளார்கள் – தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு ஒரு சீரான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மட்டும் அல்ல; தன்னார்வ நிறுவனங்களும் உற்றுழி உதவுதல் என்ற முறையில், உதவிக் கரத்தை நீட்டவேண்டும் என்ற கடமை உணர்ச்சியோடும், மனிதநேயத்துடனும், “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்”, “பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம்” என்கிற அறக்கட்டளை அமைப்புகளின் சார்பிலும், “பெரியார் கல்வி நிறுவனப் பணியாளர்கள்” சார்பிலும் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி இன்று வழங்கினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலிபூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத்துக்காக திராவிடர் கழகம் சார்பில் ரூ.10 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார் கி.வீரமணி..!! appeared first on Dinakaran.
