×

ஸ்ரீகாகுளம் மாவட்டம் காரா பகுதியில் அரசு வங்கி அடகு நகைகளை திருடி வேறு வங்கியில் அடகு வைத்த பெண் அதிகாரி: ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தது அம்பலம் 7 கிலோ தங்க நகைகள் மீட்பு

திருமலை: அரசு வங்கியில் அடகு வைத்த நகைகளை திருடி வேறு வங்கியில் அடகு வைத்து அதில் வந்த பணத்தை வங்கி பெண் அதிகாரி மற்றும் ஊழியர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், காகுளம் மாவட்டம், காரா பகுதியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை திருடி வேறு வங்கியில் அடகு வைத்து ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் காரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கூடுதல் எஸ்பி டி.பி.வித்தலேஷ்வர், காகுளம் இன்சார்ஜ் கூடுதல் எஸ்பி பி.விஜய்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வங்கியின் துணை மேலாளர் ஸ்வப்னா பிரியா, வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்கத்தை திருடி தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. லோஹிதா கன்சல்டன்சியை சேர்ந்த திருமலா ராவ், ஸ்வப்ன பிரியாவை தொடர்பு கொண்டு தங்கத்தை பெற்று சென்றுள்ளனர். வங்கி லாக்கரில் இருந்து வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்கத்தை ஓராண்டில் சிறிது சிறிதாக திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருடிய நகைகளை மற்ற வங்கியில் பினாமிகள் பெயரில் அடகு வைத்து கிடைத்த பணத்தை துணை மேலாளர் ஸ்வப்னா பிரியாவும், அவரது சகோதரர் கிரண் ஆகியோர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தில் துணை மேலாளர் ஸ்வப்னா பிரியா, வங்கி ஊழியர் சுரேஷ் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில், வங்கியில் உள்ள நகை லாக்கரை திறக்க ஸ்வப்னா பிரியாவிடம் ஒரு சாவியும், சுரேஷிடம் ஒரு சாவியும் இருக்கும் என்பதால் இருவரும் வைத்திருக்கும் இரண்டு சாவிகளைத் கொண்டு திறப்பதன் மூலம் மட்டுமே லாக்கரைத் திறக்க முடியும். எனவே சுரேஷுக்கும் மோசடியில் பங்கு இருப்பது தெளிவாகத் இருக்கிறது. ஆனால் தற்போது சுரேஷ் தலைமறைவாக உள்ளதால், அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் 9 குற்றவாளிகள் போலீசார் மூலம் அடையாளம் காணப்பட்டனர். முன்னதாக லாக்கரில் 86 பைகளில் இருந்த நகைகளை காணவில்லை என வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஸ்வப்னா பிரியாவிடம் விசாரணை நடத்தி 26 பைகளை மீட்டனர். மீதமுள்ள நகை பைகளை மீட்க இருந்த நிலையில் ஸ்வப்னா பிரியா கடந்த நவம்பர் 29ம் ேததி அன்று தற்கொலை செய்து கொண்டார். வழக்குப் பதிவு செய்த ஒரு வாரத்தில் சுமார் 60 பைகளில் இருந்த 7 கிலோ 146 கிராம் தங்க நகைகளை மீட்டப்பட்டது. மேலும், திருடப்பட்ட மொத்த தங்கத்தில் 24.5 கிராம் தங்கம் மட்டும் இன்னும் மீட்கப்படவில்லை. மீட்கப்பட்ட தங்கம் நீதிமன்றம் மூலம் வங்கி வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.

The post ஸ்ரீகாகுளம் மாவட்டம் காரா பகுதியில் அரசு வங்கி அடகு நகைகளை திருடி வேறு வங்கியில் அடகு வைத்த பெண் அதிகாரி: ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தது அம்பலம் 7 கிலோ தங்க நகைகள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kara ,Srikakulam district ,Thirumalai ,Dinakaran ,
× RELATED ‘பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசுகிறார்...