×

பாஜ நிர்வாகி இல்ல திருமண விழாவில் ரூ.10 லட்சம் பணம், நகை திருட்டு

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நேற்று முன்தினம் பாஜ மாநில நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு நடந்தது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜ தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நேற்று காலை நடந்த திருமண நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் மணமகளிடம் வரிசையாக கொடுத்த பணம் மற்றும் நகையை ஒரு பையில் போட்டு பெண் ஒருவர் வைத்திருந்தார். விழா மேடையில் பையை வைத்துவிட்டு மணப்பெண்ணுக்கு நகைகளை சரி செய்தவிட்டு திரும்பி பார்க்கும் போது பணம் மற்றும் நகை வைத்திருந்த பையை காணவில்லை. இந்த பையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகை இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பாஜ நிர்வாகி இல்ல திருமண விழாவில் ரூ.10 லட்சம் பணம், நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,executive's ,Ulundurpet ,Ulundurpet, Kallakurichi district ,Tamil Nadu ,
× RELATED பள்ளிச் சீருடை கொள்முதலுக்கான பாஜ...