×

பாஜ மகளிர் அணி தலைவியின் கணவர் குத்திக்கொலை

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா ராஜாளிப்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி (80). இவரது மகன்கள் வேலு (56), சாமிக்கண்ணு (52). இதில் 2வது மகன் சாமிக்கண்ணு விராலிமலை அருகே உள்ள விருதாப்பட்டி கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ரங்கசாமியின் மகன்களுக்கிடையே சொத்து சம்பந்தமாக தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு சாமிக்கண்ணு மகன் சதீஸ்குமார் (25), ராஜாளிப்பட்டியில் உள்ள வேலுவின் வீட்டிற்கு சென்று சொத்து குறித்து பேசினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஸ்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வேலுவை குத்தியும், கல்லை தூக்கி நெஞ்சில் போட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ரங்கசாமியையும் கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இதில் வேலு பரிதாபமாக இறந்தார். கொலையான வேலு, தமிழ்நாடு அரசு பேருந்து கழகத்தின் மணப்பாறை கிளையில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திருப்பதி. புதுக்கோட்டை மாவட்ட பாஜவில் மகளிரணி தலைவி என்பது குறிப்பிடத்தக்கது.

The post பாஜ மகளிர் அணி தலைவியின் கணவர் குத்திக்கொலை appeared first on Dinakaran.

Tags : BJP ,Viralimalai ,Rangasamy ,Rajalipatti, Viralimalai taluk ,Pudukottai district ,Velu ,Samikannu ,
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி கார் டிரைவர் பலி