×

கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு பொய் சொல்வது ஒன்று மட்டுமே பாஜவின் பிழைப்பாக இருக்கிறது

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட வந்த ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகரும் ஏதோ அள்ளிக் கொடுத்து விட்டு போனதைப் போன்ற பித்தலாட்டத்தை அண்ணாமலை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். ராஜ்நாத் சிங் புதிதாக எவ்வித வெள்ள நிவாரணத் தொகையையும் அறிவிக்கவில்லை. மாறாக, எல்லா மாநிலங்களுக்கும் வழங்கப்படும் பேரிடர் நிதியின் 75 சதவீத தொகையான ரூ.450 கோடியை தான் அறிவித்திருக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டதோ ரூ.5,060 கோடி. ஆனால் இதுவரை ஒன்றிய அரசு அது பற்றி வாயே திறக்கவில்லை. மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.1011.29 கோடியை ஒன்றிய அரசு வழங்கியதாக அரைவேக்காடு அண்ணாமலை உள்ளிட்ட பாஜவின் பித்தலாட்ட கும்பல் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி என்பது போல், பொய் சொல்வது மட்டுமே பாஜவின் தலைவர் முதல் தொண்டர் வரை பிழைப்பாக இருக்கிறது. தொடர்ந்து பொய்ப் பிரசாரம் செய்தால் அவர்களை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்.

 

The post கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு பொய் சொல்வது ஒன்று மட்டுமே பாஜவின் பிழைப்பாக இருக்கிறது appeared first on Dinakaran.

Tags : KS Alagiri ,BJP ,Chennai ,Tamil Nadu ,Congress ,President ,KS Azhagiri ,Union Minister ,Rajnath ,
× RELATED கூட்டணிக்கு தலைமை நாங்கதான்…...