×

சோனியா காந்தியின் 77வது பிறந்த நாள் விழா: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

 

திருவள்ளூர், டிச. 10: காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் கே.ஜெயக்குமார் எம்பி, திருவள்ளூர் வடக்கு மாவட்டத் தலைவர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ ஆகியோர் ஆலோசனையின் பேரில் அன்னை சோனியா காந்தியின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு கட்சித் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை அருகே உள்ள மாதா கோவிலில் சிறப்பு பிரார்த்தனையும், வீரராகவ பெருமாள் கோயிலில் சிறப்பு பிரார்த்தனையும், பஜார் பகுதியில் உள்ள மசூதியில் சிறப்பு தொழுகையும் நடத்தப்பட்டன.

இந்த விழாவிற்கு மாநில செயலாளர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் ரகுராமன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் வடிவேலு, பழனி, அருள், புருஷோத்தமன், இளங்கோவன், சத்யா, மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஸ்டாலின், மாயாண்டி, செல்வகுமார், ராஜன், சுந்தரம், உதயசங்கர், தயாளன், தாஸ், பாடலீஸ்வரன், பிரகாஷ், சண்முகம், மனோகரன், ராகுல், காந்தி, சண்முகம், சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சோனியா காந்தியின் 77வது பிறந்த நாள் விழா: இனிப்பு வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,Tiruvallur ,Congress Party ,President ,K. Jayakumar ,North ,District ,
× RELATED மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ்...