×

குழந்தைகள் காணாமல் போவது பற்றிய புகார் வரும்போது உடனே பெற்றோர் டிஎன்ஏ விவரங்களை சேகரித்து பாதுகாக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை


சென்னை: குழந்தைகள் காணாமல் போவது பற்றிய புகார் வரும்போது உடனே பெற்றோர் டிஎன்ஏ விவரங்களை சேகரித்து பாதுகாக்க ஆணையிட்டுள்ளது. பெற்றோரின் மரபணு விவரங்களை சேகரித்து டேட்டா வங்கியில் பாதுகாக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. குழந்தை மீட்கப்படுபோதும் குழந்தை டிஎன்ஏவுடன் பெற்றோர் டிஎன்ஏ விவரங்களை ஒப்பிட்டு முடிவெடுக்க வேண்டும். அதிகாரிகளுக்கு உள்துறை செயலாளரும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபியும் உத்தரவிட வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக ஐகோர்ட் பதிவுத்துறையில் 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு அளித்துள்ளது.

The post குழந்தைகள் காணாமல் போவது பற்றிய புகார் வரும்போது உடனே பெற்றோர் டிஎன்ஏ விவரங்களை சேகரித்து பாதுகாக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,CHENNAI ,Dinakaran ,
× RELATED விடுப்பு கோரிய காவலரை டிஸ்மிஸ் செய்த உத்தரவு ரத்து: ஐகோர்ட் மதுரைக்கிளை