தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் தரைதட்டி நிற்கும் சரக்கு கப்பலை இழுவை கப்பல் மூலம் மீட்கும் பணி தொடங்கியுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி, ஏற்றுமதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல தூத்துக்குடி துறைமுகத்தில் ஜென்கோ கிரியேட்டர் என்ற சரக்கு கப்பல் தரை தட்டி நின்றது. இந்த கப்பல் எகிப்து நாட்டில் இருந்து சுமார் 55,000 மெட்ரிக் டன் உரத்தை ஏற்றி வந்துள்ளது. இந்த கப்பலானது நேற்றைய முன்தினம் தூத்துக்குடி துறைமுகம் வந்தது.
ஆனால் துறைமுகம் உள்ளே வர அனுமதி இல்லாததால் துறைமுகத்தின் வெளிப்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பின் நேற்று காலை கப்பலை துறைமுகம் உள்ளே வர அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து கப்பலானது துறைமுக நுழைவு வாயில் அருகே வந்தபோது சற்று மேடான இடத்தில் சென்றதால் கப்பல் தரத்தட்டி நின்றது. எனவே கப்பலில் பணிபுரியும் ஊழியர்கள் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தனர். இந்நிலையில் அந்த கப்பலை இன்று இழுவை கப்பல் மூலம் இழுத்து வரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 55,000 டன் உரம் ஏற்றி வந்த கப்பலானது தரை தட்டி நின்ற கப்பலை மீட்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
The post தூத்துக்குடியில் சரக்கு கப்பல் தரைதட்டி நின்றதால் உரம் இறக்குமதி பாதிப்பு.. கப்பலை மீட்கும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.
