×

2027ல் சுற்றுலாத்துறையில் இந்தியா 3வது இடத்துக்கு உயரும்: Bernstein நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தகவல்

வாஷிங்டன்: சுற்றுலாத்துறையில் 2027ம் ஆண்டு உலகின் மூன்றாவது மிகப்பெரியநாடாக உருவெடுக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். உலகின் மிக பெரிய சுற்றுலா மையமாக இந்தியா உருவெடுத்து வருவதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. சுற்றுலாவுக்கான மிக பெரிய சந்தைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் Bernstein நிறுவனம் இந்திய சுற்றுலாத்துறையின் எதிர்காலம் குறித்த ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் பாலைவனங்கள், வனப்பகுதிகள், மலைகள், கடற்கரைகள், மாநகரங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியம் ஆகியவை சுற்றுலா பயணிகளை இந்தியா நோக்கி கவர்ந்து இழுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் பயணிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் உத்தரபிரதேசம், ஆந்திரா , கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடமான 3வது இடத்தை நோக்கி இந்தியா முன்னேறும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாய் சுமார் 10அரை லட்சம் கோடி ரூபாயிலிருந்து 14 அரை லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாய் 3 லட்சத்து 16ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து சுமார் 7 அரை லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் Bernstein கணக்கிட்டுள்ளது. 2019 முதல் 2027 வரையிலான காலகட்டத்தில் சுற்றுலாத்துறையின் வருவாய் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செலவிடும் தொகை சுமார் 16 சதவீதமாக உள்ள நிலையில் இந்தியாவில் 17 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணிப்போரில் 66 சதவீதத்தினர் ஆசிய நாடுகளுக்கும் 9அரை சதவீதத்தினர் வட அமெரிக்க நாடுகளுக்கும் 8 அரை சதவீதத்தினர் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர். உறவினர்களையோ, நண்பர்களையோ சந்திக்க ஓரிரு வாரங்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 2027ல் சுற்றுலாத்துறையில் இந்தியா 3வது இடத்துக்கு உயரும்: Bernstein நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Bernstein ,WASHINGTON ,Dinakaran ,
× RELATED மணிப்பூர், காஷ்மீர் பயணமா… நோ… நோ…...