![]()
சென்னை: சென்னையில் 679 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 3,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் இன்று நடைபெறுகின்றன. புயல் பாதித்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகளவில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
The post சென்னையில் 679 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.
