×

4 மாவட்ட பள்ளிகளுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு: மண்டல அதிகாரிகள் நியமனம்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் விடுமுறைக்கு பிறகு 11ம் தேதி பள்ளிகள் திறக்க ஏதுவாக மேற்கண்ட மாவட்டங்களில் பள்ளிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகளை கண்காணிக்கவும், பள்ளிகளுக்கு நேரில் சென்று பார்வையிடவும் இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்துக்கு இணை இயக்குநர்கள் நரேஷ், செல்வகுமார், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு பொன்னையா, சிவக்குமார், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு அமுதவல்லி, திருவள்ளூர் மாவட்டத்துக்கு ராமசாமி, ராணிப் பேட்டைக்கு பொன்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் புயல் பாதிப்பால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் நான்கு மாவட்டங்களுக்கும் தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

The post 4 மாவட்ட பள்ளிகளுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு: மண்டல அதிகாரிகள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Cyclone Mikjam ,Chengalpattu ,Thiruvallur ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED மிக்ஜாம் புயல், தென் மாவட்ட வெள்ள...