×

சென்னை தீவுத்திடலில் நடைபெறவிருந்த பார்முலா-4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு

சென்னை: சென்னையில் இன்றும் நாளையும் பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் போட்டிகள் நடைபெறும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்திருந்தது. தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியிருக்கும் 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தீவுத்திடலிலிருந்து பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை, சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடல் வந்து சேரும் வகையில் கார் ரேஸ் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், சென்னையில் நடைபெற உள்ள பார்முலா 4-கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் “மிக்ஜாம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக சென்னையில் நடைபெற இருந்த பார்முலா 4- கார் பந்தயம் காலவரையரையின்றி எந்த தேதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

The post சென்னை தீவுத்திடலில் நடைபெறவிருந்த பார்முலா-4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Formula 4 ,Chennai Island ,Chennai ,Formula 4 Indian Championship ,Indian Racing League ,
× RELATED பொதுமக்கள், ராஜீவ்காந்தி மருத்துவமனை...