×

ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளர்கள் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இயங்கி வந்த ப்ரணவ் ஜூவல்லரியில் பொதுமக்களிடம் ரூ.100 கோடி மேல் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து நகைக்கடையின் உரிமையாளர்களான சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா, மதன் ஆகியோர் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மதுரையில் உள்ள பொருளாதார முதலீட்டு குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மதன் செல்வராஜ் சரணடைந்தார். இந்த சூழலில், இருவரும் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை மதுரை ஐகோர்ட் கிளை நேற்று் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் சரணடைந்த மதன் செல்வராஜை 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

The post ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளர்கள் முன்ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Pranav Jewelery ,Madurai ,Pranav Jewellery ,Chennai ,
× RELATED இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை...