×

பேருந்து நிறுத்தத்தில் கார் மோதி 3 பேர் பலி

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே தொப்பம்பட்டியை சேர்ந்த சண்முகசுந்தரம் (26), தமிழரசன் (22), வாகரையை சேர்ந்தவர்கள் கனீஸ்வரன் (24), ராகுல் (22). ஆகிய 4 பேரும் நேற்று காலை 4 பேரும் காரில் கள்ளிமந்தயம் தாண்டி பொருளூர் – புளியம்பட்டி பகுதியில் வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பஸ் நிறுத்த சுவற்றில் பயங்கரமாக மோதியது. இதில் காரிலிருந்த சண்முகசுந்தரம், தமிழரசன், கனீஸ்வரன் ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ராகுல் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பேருந்து நிறுத்தத்தில் கார் மோதி 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Sanmuksundaram ,Thoppambattiya ,Dindigul district ,Palani ,Tamilharasan ,Kanishwaran ,Vakharaya ,
× RELATED டாஸ்மாக் கடைக்கு வழிகாட்டாததால்...