×

26ல் அதிமுக பொதுக்குழு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், வரும் 26ம் தேதி காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது. அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கூட்டணியில் இருந்து பாஜவை அதிமுக கழற்றி விட்டுள்ளது. கூட்டணி இல்லை என்றால் அதிமுக தலைவர்கள் மீதான வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி பாஜ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த பரபரப்பான சூழ்நிலையில் வருகிற 26ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஒரு பேரிடர் ஏற்பட்டிருக்கும்போது பெரிய கட்சி என்ற முறையில், தங்கள் கட்சி தலைவர்கள், தொண்டர்களை களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு உதவி செய்ய அறிவுரை வழங்கி இருக்க வேண்டும். ஆனால், இந்த 4 மாவட்டங்களிலும் அதிமுகவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரண உதவி மற்றும் மீட்பு பணியில் ஈடுபடாமல் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகின்றனர். இதுபோன்ற நேரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

The post 26ல் அதிமுக பொதுக்குழு appeared first on Dinakaran.

Tags : AIADMK General Committee ,Chennai ,AIADMK ,general secretary ,Edappadi Palaniswami ,Dinakaran ,
× RELATED அதிமுகவுடன் கூட்டணியா?: சரத்குமார் விளக்கம்