×

ஜெகத்ரட்சகனுக்கு எதிரான வழக்கை ஏன் திரும்ப பெற கூடாது ? ஈ.டி.க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் சிபிசிஐடி பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரு வழக்குகளையும் ரத்து செய்தது. இந்த நிலையில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கையும் ரத்து செய்யக் கோரி ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சிபிசிஐடி தொடர்ந்த பிரதான வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடியாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிகாட்டி, ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ” இந்த வழக்கு சரியான கோரிக்கையில் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதனால் ஜெகத்ரட்சகனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை அமலாக்கத்துறை ஏன் திரும்பப் பெற்றுக்கொள்ளக் கூடாது என கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், மனுவில் உரிய விளக்கம் கேட்டு, அதனை மறுபரிசீலனை செய்து மீண்டும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

The post ஜெகத்ரட்சகனுக்கு எதிரான வழக்கை ஏன் திரும்ப பெற கூடாது ? ஈ.டி.க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Jekathrachan ,E. ,Supreme Court ,New Delhi ,Jegadratchan ,Chennai High ,CBCID ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில்...