×

நாட்டில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 75% பேர் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள்: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: நாட்டில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 75 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் நியமனத்தின்போது தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் 650 பேரில் 492 பேர் (75.69%) உயர்ஜாதியினராவர். மாநிலங்களவையில் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த பதிலில் தகவல் வெளியாகியுள்ளது.

ஐகோர்ட்: ஆண்டு வாரியாக நீதிபதிகள் நியமன விவரம்
2018-ல் உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட 108 நீதிபதிகளில் 82 பேர் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2018-ல் நியமிக்கப்பட்ட 108 நீதிபதிகளில் தாழ்த்தப்பட்ட பிரிவினர் 2 பேர்; பழங்குடியினர் 2 பேர்; பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் 11 பேர், சிறுபான்மையினர் 11 பேர் 2018-ல் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கப்பட்டு உள்ளனர்; 11 பேர் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

2019-ல் உயர்சாதிகளைச் சேர்ந்த 64 பேர் நீதிபதிகளாக நியமனம்
2019-ல் நியமிக்கப்பட்ட ஐகோர்ட் நீதிபதிகள் 81 பேரில் 64 பேர் உயர்ஜாதிகளையும் 8 பேர் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளையும் சேர்ந்தவர்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 3 பேரும் பழங்குடி பிரிவைச் சேர்ந்த ஒருவரும் சிறுபான்மையினர் 3 பேரும் 2019-ல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2020-ல் உயர்சாதிகளைச் சேர்ந்த 52 பேர் நீதிபதிகளாக நியமனம்
2020-ல் ஐகோர்ட்டுகளுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகள் 66 பேரில் 52 பேர் உயர்ஜாதிகளையும் 11 பேர் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளையும் சேர்ந்தவர்கள். 2020-ல் பழங்குடி பிரிவைச் சேர்ந்த ஒருவர் கூட உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.

2020-ல் உயர்சாதிகளைச் சேர்ந்த 85 பேர் நீதிபதிகளாக நியமனம்
2021ல் உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட 120 நீதிபதிகளில் 85 பேர் உயர் ஜாதிகளை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post நாட்டில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 75% பேர் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள்: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,EU Government ,Delhi ,EU ,Dinakaran ,
× RELATED இந்திய கடலோர காவல் படையில் பெண்...