×

எப்.பி.ஐ இயக்குநர் இந்தியா வருகிறார்: அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூ என்பவரை நியூயார்க்கில் வைத்து கொலை செய்ய இந்திய அதிகாரியுடன் சேர்ந்து நிகில் குப்தா என்ற இந்தியர் முயற்சி செய்ததாக அமெரிக்கா அண்மையில் குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐயின் இயக்குநர் கிறிஸ்டோபர் ரே அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார் செட்டி கூறியுள்ளார். இந்த வருகையின்போது இந்தியா பாதுகாப்பு அதிகாரிகளுடன் ரே பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எரிக் கார் செட்டி தெரிவித்தார்.

The post எப்.பி.ஐ இயக்குநர் இந்தியா வருகிறார்: அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : FBI ,India ,New Delhi ,Gurpadwant Singh Bannu ,United States ,Canada ,New York ,
× RELATED இந்தியா கூட்டணியில் திரிணாமுல்,...