×

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ் சக்கரத்தில் பாய்ந்து வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ் சக்கரத்தில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை சென்ட்ரல் நோக்கி, நேற்று முன்தினம் மாநகர பேருந்து (தடம் எண் 15) புறப்பட்டது. அப்போது அங்கு நின்றிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஓடிவந்து, திடீரென அந்த பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் தலைவைத்து படுத்ததால், பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். தகவலறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

The post கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ் சக்கரத்தில் பாய்ந்து வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Koyambedu bus station ,Koyambedu… ,Koyambedu bus ,Dinakaran ,
× RELATED போதையில் ரகளை பெண்கள் மீது வழக்குப்பதிவு