×

சென்னை சென்ட்ரல், எழும்பூரில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சீரானது: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூரில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சீரானதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை நகரின் இரண்டு முக்கிய ரயில் நிலையங்களான சென்டரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் சீராகியுள்ளது. எழும்பூரில் நேற்று காலையே ரயில் சேவை சீரானது. சென்டரல் ரயில் நிலையத்தில் நேற்று மாலை முதல் ரயில் சேவை சீரானது. சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் கிராண்ட் ட்ரங் எக்ஸ்பிரஸ் மாலை 6.40 மணிக்கு, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இரவு 10 மணிக்கும் புறப்பட்டது.

அதே போல கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் இரவு 10 மணிக்கும், கே.எஸ்.ஆர் பெங்களூரு மெயில் இரவு 11.30 மணிக்கு, ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் இரவு 11.30 மணிக்கும் புறப்பட்டது. மேலும் ஒரு சில மாற்றங்களை தவிர இன்று முதல் முழுமையாக ரயில் சேவை சீரடையும். அதேபோல சென்ட்ரல் – கும்மிடுப்பூண்டி, சூலூர்பேட்டை ரயில் சேவையும் இன்று முதல் சீராக இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை சென்ட்ரல், எழும்பூரில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சீரானது: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Central ,Egmore ,Southern Railway ,CHENNAI ,Southern Railway… ,Dinakaran ,
× RELATED வடசென்னை-மத்திய சென்னையை இணைக்கும்...