×

சென்னையில் 340 இடங்களில் மழைநீரை அகற்றும் பணி தீவிரம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா

சென்னை: சென்னையில் 340 இடங்களில் மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைபெறும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 18,780 பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர். 850 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

The post சென்னையில் 340 இடங்களில் மழைநீரை அகற்றும் பணி தீவிரம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Secretary ,Sivdas Meena ,Shivdas Meena ,
× RELATED தமிழகம் முழுவதும் 35 டிஆர்ஓக்கள் பணியிட மாற்றம்