×

மதுரையில் ஏடிஎம் பணத்தை மோசடி செய்து வங்கியில் போலி நகைகளை வைத்ததாக 3 பேர் மீது வழக்குப்பதிவு..!!

மதுரை: மதுரையில் ஏடிஎம் பணத்தை மோசடி செய்து, வங்கியில் போலி நகைகளை வைத்ததாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் வங்கி ஊழியரான சுரேஷ் ஏடிஎம் இயந்திரத்தில் வைக்க வேண்டிய ரூ.39.19 லட்சத்தை வைக்காமல் மோசடி செய்துள்ளார். பணத்தை தனது உறவினர் வங்கிக் கணக்கிற்கு மாற்றி ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் தனது மனைவி, தங்கை பெயரில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.8.91 லட்சம் மோசடி எனவும் புகார் எழுந்துள்ளது. வங்கி மேலாளர் தந்த புகாரில் சுரேஷ், லட்சுமணன், சுமதி ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

The post மதுரையில் ஏடிஎம் பணத்தை மோசடி செய்து வங்கியில் போலி நகைகளை வைத்ததாக 3 பேர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை...