சென்னை: நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டத்தில் சில தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த 4ம் தேதி முதல் 6ம் தேதி (நேற்று) வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி இன்று (7ம் தேதி) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த திங்கள்கிழமை முதல் நேற்று வரை 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 4வது நாளாக சென்னைக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட ஆறு தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
* புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* மாணவர்கள் நலன் கருதி இன்று (7ம் தேதி) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
* கடந்த திங்கள்கிழமை முதல் நேற்று வரை 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 4வது நாளாக சென்னைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.
